நெஞ்சம் வேண்டும் உனது

சிட்டுக் குருவி இரண்டுகொஞ்சிக் குலாவிக் கொண்டுஇன்பம் கண்டது இங்கு – என்நெஞ்சம் தொலைந்தது அங்கு இறகை விரித்து சென்றுஇரும்புக் கதவில் நின்றுஇனிமை பேசுது நன்றுஎன் இளமை இனித்தது இன்று பலது நினைக்குது மனதுஇளங்குருவி பறக்குது இனிதுநெஞ்சம் வேண்டும் உனதுநான் கொஞ்ச நினைக்கும் பொழுது

அவள் இல்லாமல் நீயில்லை

தன் உயிரிலும் மேலாக நேசிப்பாள்உன் சுமையை சுகமாய் தாங்குவாள்உன்னை பார்த்த பின்பே உண்பாள்அவள் எதிர்பார்ப்பு அனைத்தும் உன்னில் இருக்கும் உன்னை மட்டுமே சொந்தமாய் நினைப்பாள்உனக்கேதுமென்றால் துடித்திடுவாள்உன் நோய் நீங்க விரதமிருப்பாள்அவள் கனவு நினைவு அனைத்தும் நீயாவாய் என்றும் உன் கையைப் பற்றிடுவாள்உன் பெயர் சொல்லப் பெற்றெடுப்பாள்நீ வெற்றி பெற கஷ்டப்படுவாள்அவள் இல்லாமல் நீயில்லை