அப்பாவின் செல்லப் பிள்ளையல்லோ

அன்பு பிள்ளையை அணைத்துக் கொள்அவரை நன்றே காத்துக்கொள்சுட்டிப் பையன் பெரும் மோசம்பேய் வந்து அடிச்சது என்கின்றான்எங்கிருந்து எடுத்துக் கதைப்பானோஎப்படி இப்படி நினைப்பானோசிங்க குட்டி ஹரிஸ் அல்லோஅப்பாவின் செல்லப் பிள்ளையல்லோநல்லா நீங்க படிக்கணும்கொஞ்சம் விளையாட்டைக் குறைக்கணும்அம்மா சொல்லை கேட்கணும்ஆசை முத்தம் குடுக்கணும்அப்பா கெதியா வந்திடுவன்அனைத்தும் வாங்கித் தந்திடுவன்பொன்னும் பொருளும் வேண்டாம்மாஇந்த பிள்ளைச் செல்வம் போதும்மா அப்பா

வாசம் தந்த மலரே

வாசம் தந்த மலரேவாடிக் கிடப்பதேனோபாசம் கொண்ட கிளியேஅடைக்கப்பட்டதாலோ தேற்றும் என் மனம் உன்னைதேவையறியேனோதேடல் கொண்ட வாழ்வில்தேவை நீதானோ போற்றிப் புகழும் நினைவும்போகத் துடிக்கின்றனவோவாடி வதங்கிக் கிடக்கும் பெண்ணைவந்து அணைக்கலையோ போட்டி போட்டு ஆட்டம் கொண்டேன்சிறைவாசம் கொள்ளவோமீண்டு வந்து உன்னைத் தாங்கநாளொன்று இல்லையோ பாதிக்கடல் மூழ்கி விட்டேன்இறைவருள் கிட்டாதாபாவி நான் எங்கு சேர்வேன்யார் தான் அறிவாரோ