உயிரில் உணர்வாகவா

புடவையாய் மாறி உன் மேனியை
காத்துக் கொள்ளவா …!
பூவாய் மாறி உன் கூந்தலில்
ஊஞ்சல் ஆடவா …!

ஆபரணமாகி நானும் உன்னை
அலங்காரப்படுத்தவா …!
பெண்ணே உன்னை பேரழகியாக்கி
பெரும் தேர் பூட்டவா …!

காதல் தேனூட்டவா …
தோளில் தாலாட்டவா …!
கண்ணே உன்னை
கவியால் கைதாக்கவா …!

நினைவில் நெருங்கி வரவா
கனவில் கலந்துவிடவா
உயிரில் உணர்வாகவா
உணர்வில் உயிராக
வரவா …!

அன்பு நிறைந்த
இடத்தில்
சந்தேகங்களுக்கு
ஒருபோதும்
இடமில்லை

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *