உன்னால் நான் அழகு

காலைப் பொழுது அழகு
கலையாத பனி அழகு
மரம் செடி கொடி அழகு
மண் பாதை தனி அழகு

சூரியன் உதிக்கும் அழகு
சுகமான விடியல் அழகு
பசும் புல் அழகு
பல கோடி பூக்கள் அழகு

பாடும் பறவை அழகு
பல இன உயிர் அழகு
தோகை மயில் அழகு
தொலைதூர பார்வை அழகு

நீல வானம் அழகு
நீரோட்ட நீரும் அழகு
மாலை மயங்கும் அழகு
மலைக் காற்றும் அழகு

நட்சத்திரம் தான் அழகு
நிலா நூறு அழகு
இல்லற வாழ்வு அழகு
இறைவன் படைப்பு அழகு

நீதானே என் அழகு
நீயின்றி ஏது அழகு
உன்னால் நான் அழகு
உருகுது என் மனது

You must judge for yourself

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *