கனவெல்லாம் உன் நினைவு

நினைக்க மறக்காத என் மனதுமறக்க முடியாத உன் நினைவு ஏங்கித் தவிக்கும் என் இதயம்தாங்கிப் பிடிக்கும் உன் நினைவு இம்சை செய்யும் இருண்ட வாழ்வுஇன்பம் தரும் உன் நினைவு இரவின் மடியில் துயிலா விழிகள்உறங்க வைக்கும் உன் நினைவு நினைவெல்லாம் உந்தன் கனவுகனவெல்லாம் உன் நினைவு

காலைப்பனிப் போர்வையில் ஓரணைப்பு

காலைப்பனிப் போர்வையில் ஓரணைப்புபொன்மேனி உரசலில் மெய் சிலிர்ப்புசெந்நிற கதிர் ஒளியில் கொஞ்ச கலைப்புபெண்மேனி சிவக்கையில் ஏன் தவிப்புஎன் நெஞ்சம் உருகையில் உன் நினைப்புரோஜாவே நீயல்லவோ சிறப்புநானும் நீயும் இணைபிரியா நட்புஎன்று மறுபடியுன்னை சந்திப்புஉன் பெயரே என் கையில் நாடித்துடிப்புஎன் குடும்பம் என்னும் என் மதிப்பு.

என் உறவே

கிட்ட இழுத்துகட்டியணைத்துஉன்னைப் பின்னிகதை நூறு சொல்லிதேவைகள் கோடிதோழியில் தேடிதொடுவானம் தொலைவோம் என் உறவே

வாரன் வாரன் உன்னோடு என்றும் வாரன்

பாரன் பாரன்என்னைக் கொஞ்சம்நினைத்துப்பாரன்வாரன் வாரன் உன்னோடுஎன்றும் வாரன்தாரன் தாரன் உனக்குவேண்டியதைத் தாரன்போறன் போறன்நீயில்லாமல்செத்துப் போறன்

பேதை நீயோ தாரணி

மனம் தேடும் மல்லிகைகுணம் நிறைந்த தேவதைஎண்ணம் சிந்தும் கனிமொழிகன்னம் கிள்ளும் பைங்கிளிபோதை தரும் தேன்துளி பேதை நீயோ தாரணி

வஞ்சகன் நானோ

தவறி விழுந்தாயோதப்பு என்மேல் தானாதவிர்த்துப் போனேனேதடுமாறுது என் மனமே உன்னை வஞ்சித்தாலோவஞ்சகன் நானோநான் பிறள கூடாதாநாக்கு அறுந்து போகாதாமன்னிக்க வேண்டும்என் சாமி நீங்க

அன்பு மகள்

என் ஆசை மகளே வருகஉன் ஆசைகள் என்னிடம் சொல்கஉன் தகப்பன் நான் இருக்கன்நீ கேட்டதைத் தான் செய்க பால்வடியும் உன் முகத்தைபார்த்தால் வந்த பசி தீருமம்மாதேன் சிந்தும் உன் அழகை ரசிக்கஇரு கண் போதாதம்மாநீ படித்து வளரும் வரைநான் நிழலாய் காப்பேன் அம்மாநான் வணங்கும் இறைவன் அளித்த அன்பு மகள் அபிஷா நீங்க வான் உயர பறக்க வேண்டும்உலகம் போற்ற வாழ வேண்டும்ஆயக்கலைகள் அனைத்தும் உனக்கு ஏக இறைவன் அருள்வாராக