உன்னால் நான் அழகு

காலைப் பொழுது அழகுகலையாத பனி அழகுமரம் செடி கொடி அழகுமண் பாதை தனி அழகு சூரியன் உதிக்கும் அழகுசுகமான விடியல் அழகுபசும் புல் அழகுபல கோடி பூக்கள் அழகு பாடும் பறவை அழகுபல இன உயிர் அழகுதோகை மயில் அழகுதொலைதூர பார்வை அழகு நீல வானம் அழகுநீரோட்ட நீரும் அழகுமாலை மயங்கும் அழகுமலைக் காற்றும் அழகு நட்சத்திரம் தான் அழகுநிலா நூறு அழகுஇல்லற வாழ்வு அழகுஇறைவன் படைப்பு அழகு நீதானே என் அழகுநீயின்றி ஏது அழகுஉன்னால் நான்… Continue reading உன்னால் நான் அழகு

உயிரில் உணர்வாகவா

புடவையாய் மாறி உன் மேனியைகாத்துக் கொள்ளவா …!பூவாய் மாறி உன் கூந்தலில்ஊஞ்சல் ஆடவா …! ஆபரணமாகி நானும் உன்னைஅலங்காரப்படுத்தவா …!பெண்ணே உன்னை பேரழகியாக்கிபெரும் தேர் பூட்டவா …! காதல் தேனூட்டவா …தோளில் தாலாட்டவா …!கண்ணே உன்னைகவியால் கைதாக்கவா …! நினைவில் நெருங்கி வரவாகனவில் கலந்துவிடவாஉயிரில் உணர்வாகவாஉணர்வில் உயிராகவரவா …! அன்பு நிறைந்தஇடத்தில்சந்தேகங்களுக்குஒருபோதும்இடமில்லை

உன் நினைவுகள் அங்கே

என் மாற்றம் யாவும்நீ தந்ததுஉன் தோற்றம் என்னைதூண்டச் செய்யுது என் மனம் சற்றுமௌனம் கொண்டதுஉன் நினைவுகள் அங்கேநிறைந்து விட்டது கண்கள் தேவையில்லைஉன்னைக் காணகரும் இருட்டிலும்வருகிறாய் மெதுவாக என் அன்பு அனைத்தும் உனதாகஎன்றும் நிலைப்பாய் இனிதாக