அன்பு மகள்

என் ஆசை மகளே வருகஉன் ஆசைகள் என்னிடம் சொல்கஉன் தகப்பன் நான் இருக்கன்நீ கேட்டதைத் தான் செய்க பால்வடியும் உன் முகத்தைபார்த்தால் வந்த பசி தீருமம்மாதேன் சிந்தும் உன் அழகை ரசிக்கஇரு கண் போதாதம்மாநீ படித்து வளரும் வரைநான் நிழலாய் காப்பேன் அம்மாநான் வணங்கும் இறைவன் அளித்த அன்பு மகள் அபிஷா நீங்க வான் உயர பறக்க வேண்டும்உலகம் போற்ற வாழ வேண்டும்ஆயக்கலைகள் அனைத்தும் உனக்கு ஏக இறைவன் அருள்வாராக

அப்பாவின் செல்லப் பிள்ளையல்லோ

அன்பு பிள்ளையை அணைத்துக் கொள்அவரை நன்றே காத்துக்கொள்சுட்டிப் பையன் பெரும் மோசம்பேய் வந்து அடிச்சது என்கின்றான்எங்கிருந்து எடுத்துக் கதைப்பானோஎப்படி இப்படி நினைப்பானோசிங்க குட்டி ஹரிஸ் அல்லோஅப்பாவின் செல்லப் பிள்ளையல்லோநல்லா நீங்க படிக்கணும்கொஞ்சம் விளையாட்டைக் குறைக்கணும்அம்மா சொல்லை கேட்கணும்ஆசை முத்தம் குடுக்கணும்அப்பா கெதியா வந்திடுவன்அனைத்தும் வாங்கித் தந்திடுவன்பொன்னும் பொருளும் வேண்டாம்மாஇந்த பிள்ளைச் செல்வம் போதும்மா அப்பா