எல்லாம் என்னவள்

பூங்குயில்பாடும் பூபாலம்வான்முகில்ஓடும் ஊர் கோலம்தேன்வண்டுபேசும் ரீங்காரம்நதி நீர்பாயும் சந்தோஷம்எல்லாம் என்னவள்விளையாட்டால்என் மனம் நிறையுதுவெறும் ஏட்டில்

நான் தேடும் அன்னமே

என்னவள் எங்கேதேடுகிறேன் இங்கேபாரடி நீயேஎன் தேவ தீயே நான் தேடும் காதலேஎங்கோ இருக்குநான் தேடும் வாழ்க்கையேஎப்போ எனக்கு தாரமே தேடி வாதாகமே தீர்க்க வாஆழக்கடல் நீயேதேடல் துணை நானே நான் தேடும் அன்னமேநீ என்றும் அழகுநான் தேடும் வண்ணமேநீ என்றும் சிறப்பு

சின்ன பூவே மெல்லப் பேசு

நீங்காமல் நான்என்றும் உன்னோடுநீயின்றி தூங்காது என்நெஞ்சம் மண்ணோடு சின்ன பூவே மெல்லப் பேசுகொஞ்சம் என்னோடுநான் ௧ண்ணயர்வேன் சற்றுஉன் மார்போடு ஏழேழு ஜென்மம் வாழ்ந்தாலும்போதாது உன்னோடுதங்கமே வேண்டும் என்றும்நீ என் நெஞ்சோடு

என் ரதியே நீ

இனிமைப் பொழுதில்என் ரதியேநீபவனி வருகிறாய் பூத்துக் குலுங்கும் பூமரங்கள்தென்றல் காற்றின்வருகையில்பரந்து விரிந்ததுபாதையெங்கும் அன்னாந்து பறக்கும்இளஞ்சிட்டுக்கள்உன் வருகையால்குதூகலிக்கின்றன உன் பாதம் பட்ட பூக்கள்மெய் மறந்துசாய்கிறது மண்ணோடு

நீ தந்த உன்னத அன்பு

உன் கண்கள் சொன்ன காதல்காலத்துக்கும் என் உயிரில் கலந்ததடிநீ தந்த உன்னத அன்புஎன் உயிர் உள்ளவரை மறவாதடி எனக்காக நீ பயணித்த பயணங்கள்என்றும் உன்னை நினைவு கூறுமடிஉன்னால் நான் கொண்ட நிம்மதியாராலும் எனக்கு தர முடியாதடி வாழ்வில் பிரியும் சூழ்நிலை வந்தாலும்வாழ்ந்திடும் என்னவளேமுப்பொழுதும் உன் கற்பனையில்என் ஜீவன்

என் ஆசை உறவே

நான் தும்மினால்உன்னை நினைப்பேன்எனக்கு புரக்கேரினால்செல்லமாய் திட்டுகிறாய் என்பேன் விக்கல் எடுத்தால்என்னை நினைக்கிறாய் என்பேன்கொஞ்சம் யோசித்தால்நீ பாவம் என்பேன் ரொம்ப சிரித்தால்உன்னால் என்பேன்கண்மூடி உறங்கினால்தலையணையாய் உன்னை அணைப்பேன் கடவுள் என்முன் தோன்றினால்சதாகாலமும் நீ வேண்டும்என்பேன்என் ஆசை உறவே

வட்ட நிலா முகம்

வட்ட நிலா முகம்வளைந்தாடும் கூந்தல்தேன் சொட்டும் உதடுதேய் பிறை இமைமின்னும் கண்கள்மிருதுவான கன்னம்செந்தாமரை மார்புசெந்நிற மேனிநடை போடும் இடைதடையாகும் உடைஎன்னவள் கலைஎன் கனவில் தொல்லை