கனவெல்லாம் உன் நினைவு

நினைக்க மறக்காத என் மனதுமறக்க முடியாத உன் நினைவு ஏங்கித் தவிக்கும் என் இதயம்தாங்கிப் பிடிக்கும் உன் நினைவு இம்சை செய்யும் இருண்ட வாழ்வுஇன்பம் தரும் உன் நினைவு இரவின் மடியில் துயிலா விழிகள்உறங்க வைக்கும் உன் நினைவு நினைவெல்லாம் உந்தன் கனவுகனவெல்லாம் உன் நினைவு

நினைவோ தொடர்ந்தது

மழையோ பொழியுதுமனமோ நிறையுதுஉடலோ குளிருதுஉன்னையே நினையுது பகலோ இருண்டதுநினைவோ தொடர்ந்ததுமணலோ நனையுதுநிலமோ வடியுது உயிரோ உருகுதுஉல்லாசம் கொண்டதுஇடியோ இடிக்குதுஇதயம் வெடிக்குது சாரல் அடிக்குதுஎன்னை இம்மை செய்யுதுமேனி புல்லரிக்குதுமேலாடை கேட்குதுஅருகில் இருந்தியோஅணைத்துக் கொள்வேனே

வாசம் தந்த மலரே

வாசம் தந்த மலரேவாடிக் கிடப்பதேனோபாசம் கொண்ட கிளியேஅடைக்கப்பட்டதாலோ தேற்றும் என் மனம் உன்னைதேவையறியேனோதேடல் கொண்ட வாழ்வில்தேவை நீதானோ போற்றிப் புகழும் நினைவும்போகத் துடிக்கின்றனவோவாடி வதங்கிக் கிடக்கும் பெண்ணைவந்து அணைக்கலையோ போட்டி போட்டு ஆட்டம் கொண்டேன்சிறைவாசம் கொள்ளவோமீண்டு வந்து உன்னைத் தாங்கநாளொன்று இல்லையோ பாதிக்கடல் மூழ்கி விட்டேன்இறைவருள் கிட்டாதாபாவி நான் எங்கு சேர்வேன்யார் தான் அறிவாரோ