நினைவில் நீ என்னவள்

காலையில் நீ கானமயில்மாலையில் நீ மாங்குயில்கனவில் நீ ௧ன்னிமான்நினைவில் நீ என்னவள் தொட்டால் சிலிர்க்கும் வெண்பனிமணந்தால் மணக்கும் மல்லிகைபட்டால் போதும் உன் மேனிபட்டாம்பூச்சியாவேன் என் தோழி வாங்கும் என் மனம் உன் அன்பைதாங்கும் என் மனம் உன்னைஏங்கும் என் மனம் நீயில்லையென்றால்

உன்னவன் நான் என்பேன்

சிறந்த குணம் கண்டேன்சீரான ஒழுக்கம் கொண்டேன்உன்னவன் நான் என்பேன்உன் அன்பைப் பறித்துக் கொண்டேன் சுமையான வாழ்வு கொண்டேன்சுகமாக நீ கிடைத்தாய்இதமான உந்தன் உள்ளம்என்றும் எனக்கு சொந்தம் கனிவான எந்தன் தங்கம்கதை நூறு சொல்லும் சொந்தம்செயலாக நீ கிடைக்கநெடுங்கால தவமிருப்பேன் நான்என்னைஅறிந்ததுஉன்னால்

நீயே தானே வேண்டும்

நீயே தானே வேண்டும்நான் அணைத்து உறங்கதாயாய் மாற வேண்டும்நான் கொஞ்சிப் பழகபேரன்புக் காதலன் நான்கொஞ்சம் சாயநீயே தானே வேண்டும் சோகம் மறக்க வேண்டும்நாம் சுகமாய் வாழ வேண்டும்தாயே நீயும் சேயாய் – என்மார்பில் கொஞ்சம் வேண்டும் நீயே தானே வேண்டும்நான் நீயாய் மாற வேண்டும்தாயே நீயே வேண்டும்நான் சேயாய் மாற வேண்டும்

அவள் இல்லாமல் நீயில்லை

தன் உயிரிலும் மேலாக நேசிப்பாள்உன் சுமையை சுகமாய் தாங்குவாள்உன்னை பார்த்த பின்பே உண்பாள்அவள் எதிர்பார்ப்பு அனைத்தும் உன்னில் இருக்கும் உன்னை மட்டுமே சொந்தமாய் நினைப்பாள்உனக்கேதுமென்றால் துடித்திடுவாள்உன் நோய் நீங்க விரதமிருப்பாள்அவள் கனவு நினைவு அனைத்தும் நீயாவாய் என்றும் உன் கையைப் பற்றிடுவாள்உன் பெயர் சொல்லப் பெற்றெடுப்பாள்நீ வெற்றி பெற கஷ்டப்படுவாள்அவள் இல்லாமல் நீயில்லை